நாங்கள் இஸ்லாமிய வெறுப்பை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ஒருவர். அவருக்கு ஹிமான்ஷி என்ற பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருந்தது. இருவரும் தேனிலவுக்காக காஷ்மீர் சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
நேற்று வினய் நர்வாலின் பிறந்தநாளில், அவரது நினைவு போற்றும் விதமாக ஹிமான்ஷி ரத்த தான முகாமை நடத்தினார். அதில் பேசிய அவர் “பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மக்கள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுகிறது. நாங்கள் அதை விரும்பவில்லை. அமைதியையே விரும்புகிறோம். எனது கணவர் காட்டிச் சென்ற வழியில் நாட்டிற்கு சேவை ஆற்றுவேன்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K