விராட் கோலியின் ரிட்டயர்மெண்ட் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஸ்டார் ப்ளேயராக இருப்பவர் விராட் கோலி. அவ்வபோது அதிரடி முடிவுகளை எடுக்கும் விராட் கோலி, தற்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்க வேண்டி பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனாலும் இதுகுறித்து ஆலோசிக்கும்படி விராட் கோலிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விராட் கோலியின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு “தயவுசெய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாதீர்கள் விராட் கோலி. முன் எப்போதையும் விட தற்போதுதான் இந்திய அணிக்கு நீங்கள் அதிகம் தேவை. உங்களிடம் இன்னும் வலிமை இருக்கிறது. இந்திய அணியில் நீங்கள் இல்லாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட் முன்பு இருந்ததுபோல இருக்காது. தயவுசெய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலி இப்போது ஓய்வு முடிவை எடுக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K