தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறியப்படும் நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனாலும் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தானாக முன்னேறி வந்து கலக்கி வருகிறார் நானி. அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வருகின்றன.
நானி நடித்துள்ள ஹிட் படத்தின் மூன்றாம் நாளை ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனம் ஈர்த்தன. சில நாட்களுக்கு முன்னர் வெளியான டிரைலரில் வன்முறைக் காட்சிகள் ரத்தம் ரத்தம் சொட்டப் படமாக்கப்பட்டுள்ளன. இந்த அதீத வன்முறைக் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு அந்த படத்தின் இயக்குனர் சைலேஷ் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் “இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.