இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர்.
தற்போது அவர் நடிப்பில் சித்தாரே ஜமீன் பார் என்ற திரைப்படம் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இன்னும் 10 வருடங்கள் மட்டுமே சினிமாவில் இருப்பேன் எனக் கூறியுள்ள அமீர்கான், அந்த 10 வருடங்களையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஆமீர்கான் தன்னுடையக் கனவுப் படைப்பான மகாபாரதம் படத்தைப் பல பாகங்களாக எடுக்கும் முடிவிலும் உள்ளார். இதன் முதல் பாகத்தை இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அல்லு அர்ஜுனிடம் அமீர்கான் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.