சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான தக் லைஃப் படம் தோல்விப் படமாக அமைந்தது. சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் ஜூன் மாதம் தொடங்கும் என சிம்பு தெரிவித்திருந்தார். கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென சிம்புவின் 49 ஆவது படமாக தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் அந்த படத்துக்காக சிம்புவுக்குக் கொடுத்த மிகப்பெரிய அட்வான்ஸ் தொகையைத் திரும்ப கேட்டுள்ளதாகவும், அதே போல சந்தானத்துக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் திரும்ப வாங்கித் தர சொல்லிக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.