"வெற்றி நடை வீர நடை, வெல்லும் இவன் படை" என்ற அடைமொழியுடன், அகவை 50-ல் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுக்கு தனது எக்ஸ் பகக்த்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான இவர், தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் எட்டுத் திக்கும் புகழ் எதிரொலிக்கிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்..
இந்த நிலையில் வெற்றி மாறனின் பிறந்த நாளான இன்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது தயாரிப்பு நிறுவனமான 'வி கிரியேஷன்ஸ்' மூலம் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் 47வது படமாகவும், சிலம்பரசனின் 49வது படமாகவும் இருக்கும் என்று தாணு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.