நடிகர் சிம்பு, தனது 49, 50, மற்றும் 51-வது படங்களுக்கு மூன்று வெவ்வேறு இயக்குநர்களுடன் பணிபுரிவதாக அறிவித்திருந்தார். திடீரென, இயக்குநர் வெற்றிமாறன் சிம்புவின் 49-வது படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதலில், 49-வது படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்தப் படத்தை ஆகாஷ் தயாரிப்பதாக இருந்தது என்றும், அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆகாஷ், சிம்புவிடம் தான் அட்வான்ஸ் கொடுத்த பணத்தையும், நடிகர் சந்தானத்திற்கு வழங்கப்பட்ட அட்வான்ஸையும் திரும்ப கேட்டுள்ளதாகவும், அதுமட்டுமன்றி, படத்தின் பூஜைக்காக செய்யப்பட்ட செலவுகளையும் சேர்த்துத் தர வேண்டும் என்று கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், வெற்றிமாறன் நுழைந்திருப்பதால், சிம்புவின் 49-வது படம் வெற்றிமாறன் படமாக இருக்குமா அல்லது அவரும் விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்: