’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (11:31 IST)
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான ‘பேட் கேர்ள்’திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல உலகப் பட விழாக்களில் கலந்துகொண்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அஞ்சலி சிவராமன் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு பெண் தன்னுடைய பள்ளி காலத்தில் இருந்து மத்திம வயதை அடையும் வரை அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பெண்ணியப் பார்வையில் சொல்லும் படமாக ‘பேட் கேர்ள்’ உருவாகியிருந்தது, படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் ஜொலிக்கவில்லை.

இதனால் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸூம் தாமதம் ஆனது. இந்நிலையில் தற்போது ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா பேட் கேர்ள் படத்தைப் பார்த்து “இந்த படம் என்னை சிரிக்கவும், அழவும் வைத்தது. இந்த படத்தை நான் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments