அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (11:26 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு மே மாதத்துக்குத் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் சிவகார்த்திகேயன்தான் என்று சொல்லப்படுகிறது. அவர் அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதால் இந்த தாமதம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments