எஸ்பிபிக்காக தெலுங்கு கலந்த தமிழில் டுவிட் செய்த கமல்ஹாசன்
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருவதும் தெரிந்ததே
இந்த நிலையில் கமல்ஹாசன் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெலுங்கு கலந்த தமிழில் எஸ்பிபி மீண்டு வர ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா
கமலஹாசன் நடித்த தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படும் போதும், தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்படும் போதும் எஸ்பி பாலசுப்ரமணியம் தான் கமல் கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் கமலஹாசன் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல்களைப் பாடியவர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் என்பதும், இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் தாய் மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு மொழி கலந்த தமிழில் கமல்ஹாசன் டுவிட்டை பதிவு செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது