Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சண்டை போட்டாலும் நட்புதான் ...எழுந்து வா பாலு ! உனக்காக காத்திருக்கிறேன் - இளையராஜா வீடியோ

Advertiesment
சண்டை போட்டாலும் நட்புதான் ...எழுந்து வா பாலு  ! உனக்காக காத்திருக்கிறேன் - இளையராஜா வீடியோ
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (22:14 IST)
பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலைஅச்சப்படும் அளவிற்குமோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பியின் மகன் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில், நடிகர் மனோபாலா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் - சிகிச்சை பெற்று வரும் புகைப்படம். #SPB #PrayforSPB #SPbalasubramanyam சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐ.சி.யூ.வில் உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா ,ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இசையைவிட்டு ஸ்வரங்கள் பிரிந்துபோகாததைப் போல் உனக்கும் எனக்கும் இடையேயான நட்பு. நம் சண்டை போட்டாலும் நட்பாகவே இருந்தோம். அது உனக்கும் எனக்கும் தெரியுன்.பாலு எழுந்து வா....உனக்காக காத்திருக்கிறேன் என இருக்கமாகாத் தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி..பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரிக்கும் கொரோனா உறுதி !ரசிகர்கள் அதிர்ச்சி