Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

Advertiesment
இந்தியா

Mahendran

, வெள்ளி, 10 அக்டோபர் 2025 (14:00 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் 16 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக சாய் சுதர்சன் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
 
இந்திய அணி 55 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!