Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

Advertiesment
PM Modi

Mahendran

, புதன், 8 அக்டோபர் 2025 (16:58 IST)
டெல்லியில் இன்று  9ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பேசினார்.
 
"மொபைல் டேட்டா நுகர்வில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஜிபி டேட்டாவின் விலை, ஒரு கப் தேநீரின் விலையை விடவும் குறைவாக உள்ளது," என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 
2014ஆம் ஆண்டுக்குப் பின், இந்தியாவில் மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் தயாரிப்பு 28 மடங்கும், ஏற்றுமதி 127 மடங்கும் உயர்ந்துள்ளன. இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக மாறியுள்ளது.
 
தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், "கடந்த 11 ஆண்டுகளில் மொபைல் டேட்டா விலை 98% குறைந்துள்ளது. 2014-ல் ரூ. 287-ஆக இருந்த ஒரு ஜிபி டேட்டாவின் விலை, இன்று ரூ. 9.11 ஆகக் குறைந்துள்ளது," என்றார். உலகளவில் மொத்த மொபைல் பயனர்களில் 20% பேர் இந்தியர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்