ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடத்தப்பட உள்ளன.
இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும். இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, அக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது.
முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி கவுஹாத்தியில் நடைபெறும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறினால், அந்த போட்டி கொழும்புவுக்கு மாற்றப்படும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி அக்டோபர் 30ஆம் தேதி கவுஹாத்தி அல்லது கொழும்புவில் நடைபெறும். இறுதியாக, கோப்பையை வெல்லும் அணிக்கான இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் போட்டி விவரங்கள் (லீக் சுற்று):
செப்டம்பர் 30: இந்தியா - இலங்கை (பெங்களூரு)
அக்டோபர் 5: இந்தியா - பாகிஸ்தான் (கொழும்பு)
அக்டோபர் 9: இந்தியா - தென்னாப்பிரிக்கா (விசாகப்பட்டினம்)
அக்டோபர் 12: இந்தியா - ஆஸ்திரேலியா (விசாகப்பட்டினம்)
அக்டோபர் 19: இந்தியா - இங்கிலாந்து (இந்தூர்)
அக்டோபர் 23: இந்தியா - நியூசிலாந்து கவுஹாத்தி
அக்டோபர் 26: இந்தியா - வங்கதேசம் (பெங்களூரு)
Edited by Mahendran