Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுபவமுள்ள ரோகித்திடம் குறிப்பு புத்தகம் கேட்ட புதுமாப்பிளை கோலி

Advertiesment
அனுபவமுள்ள ரோகித்திடம் குறிப்பு புத்தகம் கேட்ட புதுமாப்பிளை கோலி
, செவ்வாய், 19 டிசம்பர் 2017 (14:00 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் புது கேப்டன் ரோகித் சர்மாவிடம், விராட் கோலி இரட்டை சதம் குறித்து கையேடு கேட்டுள்ளார்.

 
கடந்த 11ஆம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. மறுநாள் ரோகித் சர்மா இருவருக்கும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதில், கணவர் குறித்த கையேடு புத்தகத்தை பகிர்ந்துகொள்கிறேன் என்றும் அனுஷ்கா சர்மா உங்கள் குடும்ப பெயரை அப்படியே வைத்திருங்கள் என்றும் டுவீட் செய்துள்ளார்.
 
இதற்கு இரண்டு நாட்கள் கழித்து அனுஷ்கா சர்மா பதில் டூவிட் செய்தார். அதில் நன்றி ரோகித், அபார இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 13ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ரோகித் சர்மா தெரிவித்த திருமண வாழ்த்துக்கு கோலி இன்று பதிலளித்துள்ளார். அதில், நன்றி ரோகித், அதோடு இரட்டை சதம் கையேடு புத்தகத்தை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக தோல்விகள்: சச்சினுடன் இணைந்த குக்!!