கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் ஆண்டு 100% சம்பள உயர்வு தர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
பிசிசிஐ க்கு ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே லாபத்திற்கு ஏற்றாற்போல வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என வீரர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டி இந்த கோரிக்கையை விசாரித்தது. வீரர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை ஏற்ற கமிட்டி, வரும் ஆண்டு முதல் இந்திய வீரர்களின் சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ க்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது 5.50 கோடி சம்பளம் பெற்று வரும் விராட் கோலி, சம்பள உயர்வுக்கு பின்னர் 11 கோடி சம்பளம் பெறுவார் என கூறப்படுகிறது. இந்திய அணியில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் 100% சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கிரிக்கெட் கமிட்டி தெரிவித்துள்ளது.