இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. தற்போது இவர்களை பற்றிய செய்திகள் அதிக அளவில் வெளியாகிறது.
திருமணத்திற்கு பின்பும் அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கப்போவதால் திரைப்படங்களில் நடிக்க வசதியாக அவர் மும்பையில் தங்கியிருக்க வேண்டும். எனவே விராட் கோலி டெல்லியிலிருந்து மும்பைக்கு குடியேற இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு மொத்தம் ரூ.220 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடி வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ.4 கோடி வாங்குகிறார்.
சேமிப்பில் ரூ.36 கோடி வைத்துள்ளாராம். ரூ.5 கோடியில் பிஎம்டபுள்யு, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் என 4 வெளிநாட்டு சொகுசு கார்கள் வைத்துள்ளார். கடைசி 3 வருடத்தில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 80% உயர்ந்துள்ளது.
சம்பாதிக்கும் பணத்தை புதிய வீடுகளில் முதலீடு செய்து, பின்னர் வீடுகளின் விலை ஏறியதும் அவற்றை விற்று லாபம் பார்க்கிறாராம். வீடுகள் வாங்குவது பாதுகாப்பான முதலீடு என கருதி இதில் தனது சம்பளத்தை போடுகிறார்.
இவையெல்லாம் இருக்க, அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் மும்பை ஒர்லி பகுதியில் குடியேற உள்ளனர். 70 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 7,171 சதுர அடி பரப்பளவில், ரூ.34 கோடிக்கு இதை வாங்கியுள்ளார் கோலி. இந்த வீட்டை அனுஷ்காவிற்கு திருமண பரிசாக வழங்கவிருக்கிறாராம் கோலி.