Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா சிஎஸ்கே? ஐதராபாத்துடன் இன்று மோதல்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (08:59 IST)
புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா சிஎஸ்கே?
13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இதுவரை இருந்திராத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக கடந்த சில நாட்களாக புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும், மீதி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது அம்பத்தி ராயுடு காயம் காரணமாக மோசமான ஓபனிங் மற்றும் மத்திய தர வரிசைப் பேட்ஸ்மேன்கள் சொதப்பல், தீபக் சஹார் உள்பட பந்துவீச்சாளர்களின் சொதப்பல் ஆகியவை காரணமாக தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை பெற்று வருகிறது. சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் இல்லாதது அணிக்கு பின்னடைவாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று ஐதராபாத் அணியுடன் சிஎஸ்கே அணி மோத உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் சிஎஸ்கே மேலே வர வாய்ப்பு இருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ஹைதராபாத் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றாலும் மூன்றாவது போட்டியில் மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் வார்னர் மற்றும் யார்க்கர் புகழ் நடராஜன், புவனேஷ் குமார் ரஷித் கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஐதராபாத் அணியை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments