Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்- 2020; பஞ்சரான பஞ்சாப் அணி ; மும்பை இந்தியன்ஸ் பந்தாவான வெற்றி

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (23:28 IST)
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், மும்பை அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில்  ரோஹித் சர்மா அவுட்டானார்.

இந்நிலையில் கடைசி 3 ஓவரில் மும்பை எடுத்தது 62 ரன்கள் எடுத்து படம் காட்டியது.எனவே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 191 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணிவீரர்கள் சோபிக்காததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்நிலையில் ஐபிஎல்லி 13 வது லீக்கில் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments