ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனினும், ரிஷப் பன்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா காயங்கள் காரணமாக அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்; ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 அணியில் இருந்த 10 வீரர்கள் மட்டுமே ஒருநாள் அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் , அக்சர் படேல், கே.எல். ராகுல் , நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல் , யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் , திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (வி.கீ.), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் , ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயணம் அக்டோபர் 19 அன்று பெர்த்தில் முதலாவது ஒருநாள் போட்டியுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, மீதமுள்ள இரண்டு 50 ஓவர் போட்டிகள் அக்டோபர் 23 அன்று அடிலெய்டிலும், அக்டோபர் 25 அன்று சிட்னியிலும் நடைபெற உள்ளன.
டி20 தொடரை பொருத்தவரை, முதல் போட்டி அக்டோபர் 29 அன்று கேன்பராவில் நடக்கவுள்ளது. இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 31 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 2, 6, மற்றும் 8 ஆகிய தேதிகளில் முறையே ஹோபார்ட், கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் அடுத்த மூன்று டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.