இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக கான்பூரில் முகாமிட்டுள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி டார்ன்டன், உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதியில் உட்கொண்ட உணவால் கடுமையான வயிற்று கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக ரீஜென்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இவரை போல மூன்று வீரர்களுக்கு இதேபோன்ற உடல்நலக் குறைபாடு ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தங்கள் உணவு திட்டத்தை மாற்றியுள்ளது.
கான்பூருக்கு டார்ன்டன் வருவதற்கு முன்பே லேசான வயிற்று பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொடரின் போது அவரது நிலைமை மோசமடைந்ததாக அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.