இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டிக்ளேர் செய்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அந்த அணி வெறும் 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்னும் 220 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை இந்திய அணி விரைந்து வீழ்த்திவிட்டால், இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.