Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெய்லரால் 4 முறை 300க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து!

Advertiesment
டெய்லரால் 4 முறை 300க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து!
, புதன், 5 பிப்ரவரி 2020 (17:37 IST)
டெய்லரால் 4 முறை 300க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த போட்டியில் ரோஸ் டெய்லர் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்து 348 என்ற இலக்கை எட்டி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் 
 
இந்த நிலையில் இதற்கு முன் நடைபெற்ற ஒருசில போட்டிகளிலும்  ரோஸ் டெய்லரால் தான் நியூசிலாந்து அணி 300 க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது
 
கடந்த 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 347 ரன்களை நியூசிலாந்து அணி சேஸ் செய்தது. இந்த போட்டியில் டெய்லர் 11 ரன்கள் மட்டுமே அடித்த நிலையிலும் நியூசிலாந்து வென்றது
 
அதேபோல் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 337 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெய்லர் 117 ரன்கள் எடுத்தார்.
 
மேலும் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 336 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது. இந்த போட்டியிலும் டெய்லர் அடித்த 181 ரன்கள் தான் அந்த போட்டியை நியூசிலாந்து வெள்ளை காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் இன்றைய போட்டியிலும் 348 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு கிடைத்த வெற்றிக்கு டெய்லர் தான் மிகப்பெரிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நியூசிலாந்து அணி ஏற்கனவே நான்கு முறை 300க்கும் மேற்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் அதில் மூன்று வெற்றிக்கு டெய்லரே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதிலுக்குப் பதில் கொடுத்த நியுசிலாந்து – தொடரின் முதல் வெற்றி !