Publish Date: Wed, 05 Feb 2020 (11:21 IST)
Updated Date: Wed, 05 Feb 2020 (11:23 IST)
நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது.
நியுசிலாந்து உடனான டி 20 தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டித் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் முறையே 20 மற்றும் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி அரைசதம் அடித்து அவுட் ஆன நிலையில் அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 103 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு ராகுல் மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி அதிரடியாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரிடியாக ஆடிய ராகுல் 87 ரன்களுடனும் கேதார் ஜாதவ் 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 347 ரன்கள் சேர்த்தது.