கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஜடேஜா-சாம்சன் டிரேட் ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. சஞ்சு சாம்சனை பெற்றுக்கொண்டு சென்னை அணி சாம் கரண் மற்றும் ஜடேஜாவை விட்டுக் கொடுத்துள்ளது.
இந்த டிரேடை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சி எஸ் கே நிர்வாகம். வணக்கம் சஞ்சு என சஞ்சு சாம்சனை சிஎஸ்கே குடும்பத்துக்குள் வரவேற்றுள்ள நிர்வாகம், ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து அவர்களுக்குப் பிரியாவிடைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் சஞ்சு அணிக்குள் வந்துள்ள நிலையில் இதுவே தோனிக்குக் கடைசி சீசனாக இருக்கும் என கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. சென்னை அணிக்குத் தோனிக்குப் பிறகு ஒரு நிலையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. அது இப்போது சஞ்சு மூலம் பூர்த்தி அடைந்துள்ளதால் அவர் 2026 ஆம் ஆண்டு சீசனோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.