Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா உலகக்கோப்பையில் விளையாடுமா ?– பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தடாலடி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (16:24 IST)
புல்வாமா தாக்குதலை அடுத்து உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா விளையாடக்கூடாது என குரல்கள் எழுந்துள்ளன.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த தாக்குதல் இப்போது கிரிக்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை இந்தியாப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை உலகக்கோப்பையில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனையடுத்து இப்போது இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது குறித்து தனது விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.  இதுகுறித்து ‘உலகக் கோப்பை தொடர்பான கோரிக்கையில் பிசிசிஐ மற்றும் அரசு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவோம். உலகக்கோப்பைப் போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டாம் என்று அரசு முடிவெடுத்தால் அரசின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments