Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா கொடுத்த தொடர் நெருக்கடி: பணிந்தது பாகிஸ்தான்

Advertiesment
இந்தியா கொடுத்த தொடர் நெருக்கடி: பணிந்தது பாகிஸ்தான்
, வியாழன், 21 பிப்ரவரி 2019 (21:38 IST)
புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 40 இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பத்திற்கு பின்னர் இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் ஆடிப்போயுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின் திடீரென பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ ரீதியிலான தாக்குதலை தொடர்ந்தால் அது பாகிஸ்தானுக்கும் சாதகமாக அமையக்கூடும். எனவே பாகிஸ்தானை பொருளாதார ரீதியில் வீழ்த்த இந்தியா காய் நகர்த்தியது. 
 
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% கூடுதல் வரி, பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை தடுத்து நிறுத்துதல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் விளையாட தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் நிறுத்தம் என இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் உண்மையிலேயே ஆடிப்போயுள்ளது
 
இந்தியாவின் தொடர் நடவடிக்கையை அடுத்து இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
webdunia
இந்தியாவில் 2008ல் நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பையையும்,  அவரது தொண்டு நிறுவனத்துக்கும் தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் கமிட்டி முடிவு எடுத்தது. மேலும் ஜமாத் உத் தவா மற்றும் பாலாஹ் இ இன்சானியட் ஆகிய அமைப்புகளை உள்துறை அமைச்சகம் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது 
 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அ.தி.மு.க. - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியால் பாமக அதிருப்தி!