Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கு செல்லும் நதியை தடுத்து அணை: மத்திய அரசின் அதிரடி முடிவு

பாகிஸ்தானுக்கு செல்லும் நதியை தடுத்து அணை: மத்திய அரசின் அதிரடி முடிவு
, வியாழன், 21 பிப்ரவரி 2019 (20:57 IST)
தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து கடந்த பல வருடங்களாக இந்தியாவுக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் அட்டாக் செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானை வித்தியாசமான முறையில் தண்டிக்க மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது.
 
முதல்கட்டமாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200% வரியை மத்திய அரசு அமல்படுத்தியதால் அங்கிருந்து இறக்குமதி ஆன பொருட்கள் முற்றிலும் தடைபட்டது. அதேபோல் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வடும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் அந்நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் போட்டி விளையாடுவதில்லை, உலகக்கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என காய்களை நகர்த்தி வரும் இந்தியா அடுத்தகட்டமாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதியை தடுத்து அணை கட்ட முடிவு செய்துள்ளது
 
இந்த தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு பாயும் நமது பங்கு நீரை தடுத்து நிறுத்த புதிய அணை கட்டுவதோடு, கிழக்கு நதிகளில் உற்பத்தியாகும் நீரை வழிமாற்றி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மக்களுக்கு  விநியோகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
 
webdunia
மேலும் யு.ஜே.எச். திட்டத்தின் வாயிலாக நமது பங்கு நீரை தேக்கி காஷ்மீர் மக்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும், கையிருப்பு நீர்  2வது ரவி-பியாஸ் இணைப்பு வாயிலாக மற்ற மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் அரசியல் சட்டம் எரிப்பு நுால் அறிமுக விழா ...