இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதன்முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இந்தியா 298 ரன்கள் குவித்தது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து, பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ சார்பில் அணிக்கு ரூ. 50 கோடிக்கும் மேல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இந்திய அணியின் மிதவேகப் பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேச அரசு ரூ. 1 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
கிராந்தி கௌட், இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளார். இறுதி போட்டியில் அவர் 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.