2026ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 10 அணிகளும் இணைந்து அதிகபட்சமாக 77 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும்.
ஏலத்திற்கு அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடியும் உள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல், இந்த ஆண்டு மினி ஏலத்தில் பங்கேற்க தனது பெயரை பதிவு செய்யவில்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேக்ஸ்வெல், ஆண்ட்ரே ரசல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால், பல அணிகளின் கவனம் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் பக்கம் திரும்பியுள்ளது. கிரீனை ஏலத்தில் எடுப்பதற்கு இந்த ஆண்டு பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.