பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி. அதன் பின்னர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும் அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அதே போல ஐபிஎல் தொடரில் அவர் கேப்டன் பொறுப்பேற்றதும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மெருகேறியுள்ளது. துவண்டு போய் கிடந்த ஐதராபாத் அணியை அவர்2024 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிவரை அழைத்து சென்றார். இதன் மூலம் தற்போது கிரிக்கெட் அணிக் கேப்டன்களில் தலைசிறந்தவராக பேட் கம்மின்ஸ் உருவாகியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் அணி ஒன்று பேட் கம்மின்ஸுக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் சுமார் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் தருவதாக சொல்லி, ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற சொல்லியும், தங்கள் அணிக்காக மட்டும் உலகம் முழுவதும் உள்ள லீக் போட்டிகளில் விளையாட சொல்லியும் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இருவருமே அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.