இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

Mahendran
புதன், 19 நவம்பர் 2025 (11:16 IST)
இந்தியாவில் அடுத்த மாதம்  நடைபெறவிருந்த இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
வங்கதேச மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. கொல்கத்தா மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தன.
 
வங்கதேசத்தின் அரசியல் சூழல் காரணமாகவே இந்த தொடர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பிசிசிஐ தரப்பில், இந்த தொடர்களை டிசம்பரில் வேறு தேதியில் நடத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிசிசிஐ-யிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும், புதிய அட்டவணைக்காக காத்திருப்பதாகவும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments