இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் செய்யக் களத்தில் இறங்கியது. அபிஷேக் ஷர்மா 23 ரன்களும், சுப்மன் கில் 29 ரன்களும் எடுத்து, இந்திய அணியின் ஸ்கோர் 4.5 ஓவர்களில் 52 ரன்கள் இருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.