Publish Date: Wed, 25 Jun 2025 (08:12 IST)
Updated Date: Wed, 25 Jun 2025 (08:31 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்கள், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இலக்காக 371 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி இந்த இலக்கை எட்டி சாதனை வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்திய அணி தொடர்ந்து டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோற்று வருகிறது. கடந்த ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிப் பெற்ற ஏழாவது தோல்வி இதுவாகும். ஒரு வெற்றியும், ஒரு போட்டியை சமனிலும் முடித்துள்ளது. கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.