Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி.. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

Advertiesment
இந்தியா

Siva

, திங்கள், 7 ஜூலை 2025 (06:59 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு இந்த டெஸ்ட் வெற்றி பதிலடியாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜூலை இரண்டாம் தேதி தொடங்கிய இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களும் எடுத்தது. 
 
இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்தது. அடுத்து 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் அந்த அணி 271 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த தொடர் தற்போது இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதன் மூலம் சமன் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!