Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

Advertiesment
ஐசிசி

Mahendran

, புதன், 9 ஜூலை 2025 (11:15 IST)
41 வயதில் ஐசிசி நடுவர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி நடுவராக பணிபுரிந்து வருகிறார். அவர் 34 ஒருநாள் போட்டிகள், 26 டி20 போட்டிகள் மற்றும் முதல் தர போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார்.
 
இந்த நிலையில், ஷின்வாரிக்கு திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவரது வயிற்றில் உள்ள கொழுப்பை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவருடைய சகோதரர் தெரிவித்தார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு பின் அவர் மரணம் அடைந்தார் என்றும், அவரது உடல் தங்கள் மூதாதையர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் பிஸ்மில்லாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில், பிஸ்மில்லாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, "இந்தக் கடினமான நேரத்தில் அவரது உறவினர்களுக்கு பொறுமையையும் பலத்தையும் இறைவன் தரட்டும் என பிரார்த்திக்கிறோம்" என்று கூறியுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!