Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

A Rare OG… 2k கிட்ஸ் பாஷையில் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

Advertiesment
தோனி

vinoth

, திங்கள், 7 ஜூலை 2025 (09:45 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் அஃப் ஃபேம்-ல் அவர் பெயர் சமீபத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் தோனி இன்று தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழைகள் பொழிந்து வருகின்றன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது பதிவில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி., ஒவ்வொரு நகர்விலும் அழுத்தங்களைக் கவிதையாக மாற்றிய ஒரு rare OG.

உங்களுடைய பெருமைகள் பிறந்தவையல்ல. அவை ஒரு நேரத்தில் ஒரு முடிவு, ஒரு ரன், ஒரு நம்பிக்கை என்பதன் மூலம் உருவாக்கப்பட்டவை என்று நிரூபித்தவர்.’ என புகழாரம் சூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியைப் பார்த்து எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்… நடுவர் அனில் சௌத்ரி பகிர்ந்த தகவல்!