Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

Advertiesment
விராட் கோலி

vinoth

, புதன், 9 ஜூலை 2025 (10:54 IST)
கடந்த இரு மாதங்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஏனென்றால் அவரின் உடல்தகுதிக்குக் குறைந்தது இன்னும் 4 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம். கோலி ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுபற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்தன. அப்போது அவரிடம் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. பிசிசிஐ அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்காததன் காரணமாகதான் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லண்டனில் யுவ்ராஜ் சிங்கின் Youwecan ட்ரஸ்ட் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கோலி “நீங்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?