Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அர்ஷ்தீப் சிங்கை மதரீதியாக விமர்சிப்பதா? கண்டனம் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

Advertiesment
Harbajan
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:55 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமூக வலைதளத்தில் மதரீதியாக விமர்சனம் செய்து வருவது வருவதற்கு ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார்.  இதனை அடுத்து ரசிகர்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை மதரீதியாக டுவிட்டரில் விமர்சனம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் மீதான விமர்சனத்திற்கு ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்றும் வேண்டும் என்று யாரும் கேட்சை விடுவதில்லை என்றும் இந்திய வீரர்கள் நமது பெருமை என்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் அர்ஷ்தீப் சிங் விமர்சிப்பவர்களின் செயல் வெட்கக்கேடானது என்று அர்ஷ்தீப் சிங் நமக்கு கிடைத்துள்ள தங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பாராட்டை அவர்களுக்கு கொடுத்தே ஆகவேண்டும்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!