Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“பாராட்டை அவர்களுக்கு கொடுத்தே ஆகவேண்டும்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!

Advertiesment
ரோஹித் சர்மா இந்தியா பாகிஸ்தான் rohith sharma india pakistan
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:50 IST)
இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா போட்டிக்குப் பின்னர் பேசியுள்ளார்.

தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “இது உயர் அழுத்தத்தைக் கொடுக்கும் விளையாட்டு என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைக் கடந்துதான் ஆகவேண்டும். ரிஸ்வானுக்கும் நவாஸுக்கும் இடையே பார்ட்னர்ஷிப் உருவானபோது கூட நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் சிறிது  கூடுதல் நேரம் தாக்குப் பிடித்துவிட்டது. அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சற்று சிறப்பாக இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது எங்களுக்கு ஒரு நல்ல கற்றல். எந்த ஆடுகளத்திலும் நீங்கள் 180 ரன் எடுத்தால் அது நல்ல ஸ்கோர்.இன்று நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் சொன்னது போல் நீங்கள் பாகிஸ்தானுக்கு பாராட்டுகளைக் கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். கோலி, மற்றவர்கள் நிலைத்து நின்றார். நீண்ட நேரம் பேட் செய்ய ஒருவர் தேவைப்பட்டார். அவரும் அந்த டெம்போவுடன் பேட் செய்தார். அந்த ஸ்கோரை விராட் பெறுவது அணியின் பார்வையில் முக்கியமானது. அப்போது ஹர்திக், ரிஷப் ஆகியோரின் விக்கெட்டுகள் தேவை இல்லாதவை. ” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானத்தில் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா… காரணம் இதுதான்!