ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

Siva
திங்கள், 1 டிசம்பர் 2025 (12:42 IST)
இந்திய அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டை அவரது தோல்விகளை கொண்டு மதிப்பிட வேண்டாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். 16 மாதங்களுக்கு பிறகு அணிக்குத் திரும்பிய ருதுராஜ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை 4வது இடத்தில் விளையாட வைத்ததற்கு ஆகாஷ் சோப்ரா இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்தார்.
 
அவரது யூடியூப் சேனலில் பேசிய சோப்ரா, "ருதுராஜின் முக்கிய பணி ஓப்பனிங் பேட்டிங் செய்வதே. அவர் 4வது இடத்தில் ஆடியதில்லை. அவருக்கு முழுமையாக மூன்று வாய்ப்புகள் டாப் ஆர்டரில் வழங்க வேண்டும். அதுவரை அவரது ஒருநாள் கிரிக்கெட் குறித்து தீர்ப்பளிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று கேட்டு கொண்டார்.
 
மேலும், மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளித்துவிட்டு, ரிஷப் பண்ட்டை புறக்கணித்த முடிவையும் சோப்ரா விமர்சித்தார். "ரிஷப் பண்ட் ஒரு உண்மையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். வாய்ப்பு இருந்தும் அவரை பயன்படுத்தாமல், அந்த இடங்களில் விளையாடாத வீரர்களை அணி நிர்வாகம் அனுப்புவது ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments