ஆசிய கோப்பை 2025-ஐ வென்ற பிறகு, இந்திய அணி தனது அடுத்த முக்கிய பயணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது. 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஆண்ட்ரசன்-டெண்டுல்கர் கோப்பை தொடரை போலவே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் மூன்றாவது வீரர் குறித்த குழப்பம் தொடர்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்ட கருண் நாயர், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து, தனது இடத்தை உறுதிப்படுத்த தவறினார்.
 
									
										
			        							
								
																	
	 
	மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே இறுதி அணியில் இடம்பெற முடியும்.
 
									
											
									
			        							
								
																	
	 
	தேவ்தத் படிக்கல் இந்திய அணிக்காக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில், 30 சராசரியுடன் 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம், ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன், இதுவரை தனது மூன்று டெஸ்ட் போட்டிகளில் 140 ரன்கள் எடுத்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் (Predicted Playing XI):
	கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் / சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.