சச்சினை விட கோஹ்லிதான் பெஸ்ட் என்றும், கோஹ்லி எப்படி இதுபோல் நன்றாக விளையாடிக் கொண்டே கேப்டனாக இருக்கிறார் என்று தெரியவில்லை என முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வென்று சாதனை படைத்தது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரில் கோஹ்லி தனது 35வது சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இவர் எளிதாக சச்சின் சாதனையை முறியடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கோஹ்லி கேப்டன்சி மற்றும் அவரது பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இந்திய அணியில் சேவாக், சச்சின், டிராவிட் என சிறந்த வீரர்கள் இருந்தார்கள். கோஹ்லியும் அப்படி ஒருவர்தான் என்று நினைத்தேன். ஆனால் அவர் அதற்கு மேல். எனக்கு பின் தோனி இந்திய அணி சிறப்பாக வழிநடத்தினார். தோனி இந்த அளவிற்கு அணியை முன்னேற்றுவார் என்று யாருமே நினைக்கவில்லை.
ஆனால் கோஹ்லி எப்படி இதுபோல் நன்றாக விளையாடிக் கொண்டே கேப்டனாக இருக்கிறார் என்று தெரியவில்லை. கோஹ்லியை எல்லோரும் சச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். ஆனால் கோஹ்லி சச்சினை விட சிறந்தவர் என்று கூறியுள்ளார்.