தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி ஏற்கனவே 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில் நேற்று 6வது ஒருநாள் போட்டியில் மோதியது.
சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தாக்கூர் 4 விக்கெட்டுக்களையும், பும்ரா, சாஹல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
எனவே 205 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆனபோதிலும் கேப்டன் விராத்கோஹ்லி அபாரமாக விளையாடி 129 ரன்கள் குவித்தார். இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழாந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் கேப்டன் விராத் கோஹ்லி பெற்றுள்ளார். விராத் இந்த தொடரில் 558 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.