Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது கோஹ்லியால் சாத்தியமா? அதிரடி மன்னன் சேவாக் கணிப்பு

Advertiesment
இது கோஹ்லியால் சாத்தியமா? அதிரடி மன்னன் சேவாக் கணிப்பு
, சனி, 17 பிப்ரவரி 2018 (15:55 IST)
கோஹ்லி ஒருநாள் போட்டியில் எத்தனை சதங்கள் அடிப்பார் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதிரடி மன்னன் சேவாக் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

 
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் கோஹ்லி இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார்.
 
நேற்று நடைபெற்ற 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி தனது 35வது சதத்தை பதிவு செய்தார். இவரை ஏற்கனவே கிரிக்கெட் உலகம் ரன் மெஷின் என்று அழைத்து வருகிறது. இந்நிலையில் இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சாதனையை மிக விரைவாக நெருங்கி வருகிறார்.
 
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 49 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதுவரை 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோஹ்லி 35 சதங்கள் பதிவு செய்துள்ளார். 
 
இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் கேட்ட கேள்விக்கு சேவாக் அளித்த பதில் கோஹ்லி மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
 
இறுதியில் கோஹ்லி எத்தனை சதங்கள் அடிப்பார் என்று ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு 62 என கணித்து பதிலளித்துள்ளார். விராட் கோஹ்லியில் வேகத்தை பார்க்கும் போது அவர் அதற்கு மேல் சதங்கள் அடிக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வெற்றிக்கு காரணம் அனுஷ்காதான்: கோலி!