Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

Advertiesment
சுரேஷ் ரெய்னா

Siva

, புதன், 13 ஆகஸ்ட் 2025 (07:51 IST)
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்துகிறது. இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சில ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் அவற்றின் விளம்பரங்கள் தொடர்பான பணமோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில், அவர் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
 
ஏற்கனவே, இந்த வழக்கில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அடுத்தகட்டமாக சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. 
 
இன்றாஇய விசாரணைக்கு பிறகு, சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?