Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

Advertiesment
அனில் அம்பானி

Mahendran

, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (10:26 IST)
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு, ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5 அன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம் மும்பையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், சுமார் 50 நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டனர்.
 
போலி வங்கி உத்தரவாத வழக்கு தொடர்பாக ஒரிசா மற்றும் கொல்கத்தாவிலும் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த போலி வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது.
 
அதேபோல் செபி நடத்திய தனி விசாரணையில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (R Infra) நிறுவனம், க்ளீ பிரைவேட் லிமிடெட் (CLE Pvt Ltd) என்ற நிறுவனம் மூலம் சுமார் ரூ.10,000 கோடியைத் திசை திருப்பியுள்ளது
 
 அனில் அம்பானியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த பின்னர் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!