ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. அதில் சென்னை அணியின் கேப்டன் தோனி வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து லக்னோ அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொருத்தவரை கடைசி ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், லக்னோ அணி கடைசி 5 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்குமா அல்லது சென்னை வழக்கம்போல் சரண்டர் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் இரு அணிகளையும் வீரர்கள் விவரங்கள் இதோ
சென்னை: ஷைக் ரஷீத், ரச்சின், திரிபாதி, ஜடேஜா, விஜய் சங்கர், ஓவர்டன், தோனி, காம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா
லக்னோ: மார்க்கம், மார்ஷ், பூரன், ரிஷப் பண்ட், படோனி, மில்லர், சமத், ஷர்துல், ஆவேஷ், ஆகாஷ் தீப், ரதி,