ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் ஐதரபாத் அணியில் இருந்து டேவிட் வார்னர்
நீக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். அதிக அரைசதங்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணியை வழிநடத்திவந்தவர். திடிரென்று கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்ட அவர் பின்னர் அணியிலும் இடம் கிடைக்காமல் இருந்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்த சீசன்களில் அவர் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார். இப்போது அவர் சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணி நிர்வாகத்தால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதில் வார்னர் ஒரு கிளாஸான வீரர். அவர் ஒரே நாளில் தன் முழு ஆட்டத்திறனையும் இழக்க மாட்டார். அவர் மீண்டு வருவார். இந்த ஐபிஎல் தொடரில் அவரை மிகவும் மோசமாக நடத்தினர். முதலில் கேப்டன்சியைப் பறித்து பின்னர் அணியை விட்டே நீக்கினர். பின்னர் அவர் மைதானத்துக்கு வருவதற்கே தடை போட்டனர். ஒரு வீரரை மனதளவில் எவ்வளவு துன்புறுத்த முடியுமோ அந்தளவுக்கு செய்தனர். நான் வார்னரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். நிச்சயம் அவர் திரும்புவார் எனக் கூறியுள்ளார்.