Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்ப்ரிக்கா அணிக்கு மேலும் ஒரு இழப்பு – டெஸ்ட்டில் இருந்து ஸ்டெயின் ஓய்வு !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:02 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கிரிக்கெட் வரலாற்றில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் டேல் ஸ்டெயினுக்கு எப்போதுமே இடமுண்டு. கடந்த சில ஆண்டுகளாகவே காயங்களால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் அவதிப்பட்டு வந்த இவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மற்ற இரண்டு வடிவிலான பார்மட்களிலும் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான ஸ்டெய்ன் 93 போட்டிகளில் கலந்துகொண்டு 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வென்ற இவர் அந்தாண்டில் மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்களை சாய்ததார்.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸின் ஓய்வால் தனது பலத்தை இழந்துள்ள நிலையில் இப்போது ஸ்டெயினின் ஓய்வு அந்த அணிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments